வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக வீட்டில் நகை மற்றும் பணத்தை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் பெரும்பாலும் மக்கள் வங்கிகளையே நாடுகிறார்கள். பொதுமக்களின் பண மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிகளில் லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரில் பொதுமக்கள் தங்களுடைய பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுடன் தங்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் வங்கிகளில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய சட்ட திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுடன் வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் லாக்கர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுடன் வங்கிகள் லாக்கர் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply