ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 2020 ஆம் ஆண்டு நான்கு சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது ஆறு புள்ளி ஐந்து சதவீதமாக உள்ளது. இந்திய பொருளாதார சரிவு காரணமாக தொடர்ந்த ரிப்போர்ட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த முறை இந்திய பொருளாதார வளர்ச்சி ஏறு முகத்தில் இருந்ததால் ரெப்போ வட்டி விகிதம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்று எஸ்பிஐ வங்கியின் ஆய்வு குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த பணவீக்கம் தற்போது நான்கு புள்ளி ஏழு சதவீதமாக குறைந்துள்ளதால் ரெப்போ வட்டி விகிதம் உயராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.