புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல்,வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்களைப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொறியியல், நர்சிங் மற்றும் கலை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கு  ஜூன் 6-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் தொழில் படிப்பில் சேர விருப்பமுள்ள பொதுப் பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் ஆயிரம் ரூபாய் மற்றும் எஸ்சிஎஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். கலை அறிவியல் மற்றும் வணிக படிப்பில் சேர உள்ள பொது பிரிவினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 300 ரூபாயும் எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 150 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் நர்சிங் பாட பிரிவுகளுக்கு 12ஆம் வகுப்பில் மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.