
தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 26.12.2022 முதல் 1.1.2023 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்றஏழு லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்து ஐந்து ரூபாய் மதிப்புள்ள 1144 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 2104 லிட்டர், 68 எரிவாயு உருளை ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 36 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 262 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.