மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தனது மனைவியிடம் இருந்து தான் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் கேட்டு, அதை மனைவி கொண்டு வர மறுத்ததால் தனது மனைவியை சூடான கம்பியால் தாக்கியதாக கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்  ரேணு அளித்த புகாரில் ,  2019 ஆம் ஆண்டு பனீஹார் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் யாதவ் என்பவருடன் தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், திருமணம் நடந்த நாளிலிருந்து அவரது கணவர்,மாமியார்,
மற்றும் மாமனார் தன்னை வரதட்சனை கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்துவதாகவம் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 9 அன்று ரேணுவின் மாமனார் மற்றும் மாமியார் தனது மகன் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த ஐந்து லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அவர் அந்த ரூபாயை கொடுக்க மறுத்ததால் கணவர் அவரை ஒரு அறையில் போட்டு தாக்கி சூடான கம்பியால் அவர் மீது தீக்காயம் ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்று பக்கத்து வீட்டில் தகவல் கொடுத்த பின், ரேணுவின் சகோதரர் அவரை தன் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக ரேணுவின் கணவர் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.