தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி மதுவிலக்கு துணை எஸ்பி, மதுவிலக்கு பொறுப்பு இன்ஸ்பெக்டர் மேகா ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது இனிகோ நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டில் சென்று சோதனை நடத்தினர். அப்போது ஐஸ் கிரிஸ்டைல் மெத்தம் பொட்டைமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு சுமார் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதன் மதிப்பு தன் மதிப்பு சுமார் ரூ.24 கோடியாகும். இதைத்தொடர்ந்து நிர்மல்ராஜ் மற்றும் அவருடைய மனைவி விமலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் வீட்டில் போதை பொருளை பதுக்கி வைத்திருந்தது உறுதியானது. மேலும் அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.