அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், ‘தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என கூறியுள்ளார்.