ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 லட்சம் இறப்பீடு பெறுவதற்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவன் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடிய பெண் மீது கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒடிசாவின் மணிய பந்தாவை சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவரது கணவர் பிஜய் தத்தா. இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒடிசா ரயில் விபத்தில் கணவர் உயிரிழந்து விட்டதாகவும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கீதாஞ்சலி கூறியுள்ளார். உயிரிழந்தவரின் ஒரு உடலையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்ததில் அவர் கூறியது பொய் என்பதை போலீசார் கண்டறிந்து எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் மனைவிக்கு எதிராக அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.