ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயில் லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் செய்யப்பட்ட போன் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணி நேரத்தின் போது பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் அவர்களது கவனம் சிதற வாய்ப்புள்ளதால் இந்த அறிவிப்பை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ஏற்பட்டு வரும் ரயில் விபத்தை கவனத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.