ஒடிசாவில் நேற்று மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீட்டு தேர்வை டிக் செய்வது அவசியமாகும்.

ஐ ஆர் சி டி சி வெறும் 45 பைசாவுக்கு 10 லட்சம் காப்பீட்டை வழங்குகின்றது. எதிர்பாராத விபத்து காரணமாக மரணம் அல்லது ஏதேனும் காயம் ஏற்பட்டால் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே ரயில் பயணிகள் ஒவ்வொரு முறையும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இன்சூரன்ஸ் டிப்ஸ் செய்து நாமினியை சேர்த்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பணம் கிடைக்கும்.