நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வருடத்தில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 13வது தவணை பிப்ரவரி 27ஆம் தேதி விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் பலருக்கும் நிதி உதவி கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. என் நிலையில் அடுத்த தவணை உங்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்கு முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் beneficiary status என்பதை கிளிக் செய்து உங்கள் பதிவு எண் அல்லது திட்டத்துடன் இணைக்கப்பட்ட 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர் திரையில் தோன்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட்டு submitபட்டனை கிளிக் செய்தவுடன் திரையில் பயனாளிகளின் நிலையை தெரிந்து கொள்ள முடியும். இதனை வைத்து உங்களுக்கு அடுத்த தவணை பணம் வருமா வராதா என்பதை இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.

அதேசமயம் கேஒய்சி சரிபார்ப்பு, பயனாளிகளின் தகுதி மற்றும் நில விவரங்கள் தொடர்பாக எந்த தகவல்கள் எழுதப்பட்டுள்ளது என்பதை இதில் தெரிந்து கொள்ள முடியும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றின் முன்பை இல்லை என்று எழுதப்பட்டால் உங்களுக்கு பணம் வராது. இந்த அப்டேட்டை சரியாக முடித்தால் மட்டுமே உங்களின் வங்கி கணக்கில் பணம் வந்து சேரும்.