கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் போன்ற மூன்று தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், கிளீனர்கள், ஆட்டோ டிரைவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள், கண்டக்டர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ குணம் நவீன கருவிகள் மூலமாக கண் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் முகாமில் கிட்ட பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், இரத்த அழுத்தம், தூரப்பார்வை மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு தேவையான பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!
Related Posts
மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு நடந்த கொடூரம்… தோழியின் நண்பர்களால் வந்த வினை… பரபரப்பு சம்பவம்….!!
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் ஒருவரின் மகள்(21) மகளிர் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவரது தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்துள்ளார். மேலும் அந்த இளம் பெண் சிறிது மன…
Read more“ஒரே வீடியோ கால் தான்….” மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கணவர்…. அலறியடித்து ஓடி வந்த பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்….!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாய் மூகாம்பிகை நகரில் கோபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டு மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று கோபால் ராஜ் தனது மனைவியின்…
Read more