இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஏனென்றால் வங்கிகளை விட அதிக அளவு வட்டி விகிதம் கிடைக்கின்றது. அதேசமயம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் எந்த திட்டத்திலும் இல்லாத அளவிற்கு வருடத்திற்கு 8.2 சதவீதம் பட்டி வழங்கப்படுகிறது. மேலும் இதில் குறைந்த பட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் 55 வயது முதல் 60 வயது நிரம்பிய ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வி ஆர் எஸ் எடுத்தவர்கள் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதில் முதலீடு செய்தால் வரி சலுகைகளும் பெற முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்வதற்கான வசதியும் தற்போது உள்ளது. நீங்கள் தனிமையாக அல்லது கூட்டு சேர்ந்து இந்த கணக்கை தொடங்கலாம். குறிப்பாக இந்த திட்டத்திலிருந்து பலமுறை பணம் எடுப்பதற்கு அனுமதி கிடையாது.