கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்பட்டு, பின்னர் கோடை வெயில் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே இன்று 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன.

இதையடுத்து, இது குறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர்  முக ஸ்டாலின், ‘கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள். நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்’ என கூறியுள்ளார்.