தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1000 ரொக்க பணத்துடன, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. இந்த பரிசு தொகுப்பு வருகிற 12ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

அந்த வகையில் பொதுமக்களும் தங்களது பொங்கல் பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடை வாயிலாக பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.1000 டாஸ்மாக் கடை வழியாக மீண்டும் அரசிற்கே சென்றுள்ளது. அதாவது, பொங்கல் பரிசை வாங்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு நபர் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.