நடிகர்கள் வடிவேலு மற்றும் சந்தானத்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் பாவா லட்சுமணன். இவர் மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றார். சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு பரப்புரை மேற்கொண்ட போது, மாயி அண்ணே வந்திருக்காங்க, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காங்க என்ற தனது ட்ரெண்டிங் சினிமா வசனத்தை வேட்பாளர் பெயரோடு சேர்த்து சொல்லி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.