திருச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் திட்டம் நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் சாரநாதன் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் பந்துவீச்சாளர் தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை வீரர் வீராங்கனைகளுக்கான தேர்வு அங்கு நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 1800 பேர் பங்கேற்று உள்ளனர்.
இவர்களுக்கு பந்து வீசும் வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் சிறந்த முறையில் பந்து வீசும் வீரர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு வெல்லப்படுவார்கள். 14 வயது முதல் 24 வயது வரை உட்பட்ட வீரர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த திட்டத்தில் அடையாளம் காணப்படும் சிறந்த பந்துவீச்சாளர் வீரர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.