12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி ஆபாச படம் பார்க்க வைத்து பலாத்காரம் செய்ததாக டியூஷன் ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் டியூசன் ஆசிரியரை கைது செய்தனர். இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் சம்மதத்துடனே ஆசிரியர் உடலுறவில் இருந்ததாகவும், சம்பவம் நடந்த காலகட்டத்தில் மாணவி மைனராக இருந்தார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூறியுள்ளது.

மேலும் மாணவியும் டியூஷன் ஆசிரியரும் மூன்று ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளனர் அந்த டியூஷன் ஆசிரியர் வேறு ஒருவரை திருமணம் செய்த பிறகு மாணவி பலாத்காரம் புகார் அளித்துள்ளார். மாணவியின் சம்மதத்துடன் தான் ஆசிரியர் உடலுறவில் ஈடுபட்டுள்ளார் என கூறி டெல்லி நீதிமன்றம் கைதான டியூஷன் ஆசிரியரை விடுதலை செய்தது.