தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சற்று தாமதமாக ஜனவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.