தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இந்த வருடம் அனைத்து பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகை முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகை நேரடியாக மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு வழங்கப்பட உள்ள கரும்புகள் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட மாட்டாது. அனைத்து ரேஷன்கடைகளும் வரும் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் எனவும் தமிழகத்தில் 4,445 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.