சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வரும் ராம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் விற்பனை தளத்தில் பேட்மிட்டன் விளையாட்டுக்கான ஷூ ஒன்றை தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்துள்ளார். ஜி எஸ் டி வரியுடன் சேர்த்து 1488 ரூபாய் மதிப்புள்ள அந்த ஷூ நேற்று அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பார்சலை திறந்து பார்த்து அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது அந்த பார்சலில் வலது பக்கம் ஷூ மட்டும் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய நிலையில் அமேசான் நிறுவனம் அதற்கான மாற்று ஷூவை வழங்க முடியாது எனவும் பணத்தை மட்டும் திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் பதில் அளித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.