இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது 2025 மற்றும் 26 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அதன்படி ‌ISCE, ISC பாடம் முறைகளும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் ஏஐ படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் 2020 தேசிய கல்விக் கொள்கையின்படி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இதன் மூலம் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.