தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரறை போற்று படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் அடுத்ததாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து காக்க காக்க 2 திரைப்படத்தை எடுப்பதற்கு கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.