வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது.

இதுபோல வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமும் நாளை ரிலீசாகவுள்ளது.

இதனிடையே ரசிகர்கள் அந்தந்த படங்களை புரமோஷன் செய்யும் வகையில் ட்விட்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளனர். #VarisuPremiere, #ThunivuFDFS, #ThunivuFromTomorrow, #ThalapathyVijay?, #HVinoth, #ThunivuTickets என ஹேஷ்டாக்குகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வரும்நிலையில் தீடிர் திருப்பமாக சூர்யா ரசிகர்கள் அஜித், விஜய் படங்களுக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு அஜித், விஜய் ரசிகர்கள் நெகடிவ் விமர்சனங்களை பரப்பியதால் வாரிசு, துணிவு படத்தில் பதிலடி கொடுக்க போவதாக சூர்யா ரசிகர்கள் ட்விட் செய்து வருவது, விஜய் -அஜித் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.