மதுரையில் இரண்டு குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனூர் பகுதியை சேர்ந்த காவலர் ஜெயலட்சுமி என்பவருக்கு மகன் காளிமுத்து ராஜா (8), மகள் பவித்ரா (7) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு விழுந்தார். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.