மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான அகல விலைப்படி உயர்வு எதிர்நோக்கி ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது 42 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இது தற்போது மூன்று சதவீதங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வாறு உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் 45 சதவீதம் அகலவிலைப்படி பெறுவார்கள். தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு அகலவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.