ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் அனைத்து முக்கிய ஆவணங்களோடும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவுசெய்யும் போது, ஆதார் கேட்கப்பட்டதாகவும், அதற்காக ஆதார் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் தனிப்பட்ட அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் இணைப்பது கட்டாயமில்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.