மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியிலுள்ள அனுமன் மற்றும் துர்கா கோயிலுக்கு அக்கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் முதல்-மந்திரியான உமா பாரதி சென்று உள்ளார். அப்போது கோயிலுக்கு முன்னால் மதுக்கடை அமைந்துள்ளது.

இதுகுறித்து உமா பாரதி கூறியதாவது, கோயிலுக்கு முன்னால் மது கடையும், பாரும் இருக்கிறது என கோபத்துடன் கூறினார். முதல்-மந்திரி என்னிடம் ஜன,.31 ஆம் தேதிக்குள் புது மதுகொள்கை அறிவிக்கப்படும் என கூறினார். அந்த கொள்கைக்காக நான் இன்னும் காத்துக்கொண்டிருக்க முடியாது. இந்த நிலையில் நிவாரி மாவட்டத்தில் ஆர்ச்சா நகரிலுள்ள மதுக்கடை ஒன்றின் முன் பசுக்களை கட்டி வைத்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அதோடு மதுவை கை விட்டு விட்டு பால் குடியுங்கள் என உமா பாரதி கோஷம் எழுப்பினார்.