அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் தற்போது களப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் விருதுநகருக்கு சென்றார். அப்போது அவரை காண பொதுமக்கள் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் வணக்கம் வைத்துக் கொண்டே நடந்து சென்றார். அந்த சமயத்தில் ஒருவர் முதல்வருக்கு கை கொடுக்க வந்தார். அவரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தி கைகளை தட்டி விட்டு விட்டார்.
இது தொடர்பான வீடியோவை அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இடுகுறித்த பதிவில், மக்கள் தன்னை தொடுவதை கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை. இன்று மக்களை கண்டால் வெறுக்கும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் அதிமுகவினர் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
மக்கள் தன்னை தொடுவதை கூட விரும்பாத நம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
இன்று மக்களை கண்டால் வெறுக்கும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மக்கள் விரைவில் தூக்கி எறிய காத்திருக்கிறார்கள்!#SadistStalin pic.twitter.com/wExog3B9TG
— DJayakumar (@djayakumaroffcl) November 9, 2024