தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (21.1.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகர் பகுதிகள், என்.எஸ்.நகர், ரோஜாநகர், இ.பி.காலனி, அங்குநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, நந்தவனப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருவள்ளூர்:

ஊத்துக்கோட்டை, அனந்தேரி, மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம், வடதில்லை, தாராட்சி, சீத்தஞ்சேரி, செஞ்சியகரம், கீழ்சிற்றம்பாக்கம், சிற்றம்பாக்கம், பென்னாலூர்பேட்டை, ராமலிங்கபுரம், வெள்ளமாகண்டிகை, போந்தவாக்கம், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரி பேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லூர், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்தூர், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொராக்காய் பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்தூர், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆா்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாகை:

நாகப்பட்டினம், வெளிப்பாளையம், மஞ்சக்கொல்லை, பொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை, வேளாங்கண்ணி நகர், செருதூர், பரவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாகூர் தர்கா, திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தாமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

வேலூர்:

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குருவராஜபாளையம், சின்ன பள்ளி குப்பம், ஓ.ராஜாபாளையம், வேப்பங்குப்பம், ஒடுகத்தூர், மேல்அரசம்பட்டு, ஆசனம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.