சென்னை மாநகரில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 100 சைபர் புகார்கள் பதிவாவதால் போலீசார் அதை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் 154 சைபர் வழக்குகள் பதிவான நிலையில், 25 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் 10-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் காவல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப், ஜிமெயில் மற்றும் வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் நடைபெறும் குற்றங்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து செல்போனுக்கு குறுந்தகவல் மற்றும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் போன்றவைகள் வரும்போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சைபர் கரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க முடியும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.