உலக அளவில் பல நாடுகளில் தொற்று நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தியாவையும் தொழு நோய் இல்லாத நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தொழு நோய் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தொழுநோய் குறைந்த மாவட்டமாக தற்போது கோயம்புத்தூர் தேர்வாகியுள்ளது. இது தொடர்பாக தொழுநோய் ஒழிப்புத்துறை துணை இயக்குனர் சிவகுமாரி கூறியதாவது, தொழுநோய் பாதிப்புகள் மூலம் 800-க்கும் மேற்பட்டவர்களால் கணக்கெடுக்கப்படுகிறது.

தொழுநோய் பாதிப்பால் தற்போது 72 பேர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த வருடம் 67 பேர் குணமாகி உள்ளனர். தமிழகத்தை வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தொழுநோய் குறைந்த முதல் மாவட்டமாக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம் விருது வழங்கப்படும். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உறுதி செய்யப்பட்டு விரைவில் வெளிவரும் என்று கூறினார்.