கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரிடம் 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரியை செல்போன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் நீங்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் உங்களை வீட்டு காவலில் வைத்திருக்கிறோம் கூறி போலியான அணையை காட்டி மிரட்டியுள்ளார்.

அடுத்ததாக ரிசர்வ் வங்கி அதிகாரி என கூறி பேசிய மற்றொரு மர்ம நபர் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்புங்கள். அதை சரி பார்த்துவிட்டு திருப்பி அனுப்புவோம் என கூறினார். இதனை நம்பி ஓய்வு பெற்ற அதிகாரி மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிருக்கு 70 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். சிறிது நேரத்தில் மர்ம நபர்கள் வீடியோ அழைப்பை துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அதிகாரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த கிஷன் தாஸ், குமார், சுரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.