சென்னையில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தவும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும்  போக்குவரத்து காவல்துறை சார்பாக 155 இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டங்களில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் பற்றிய பிரச்சினையை பலரும் முன் வைத்துள்ளனர்.

அதேபோல் பாதசாரிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவது, பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்கள் இடையூறு செய்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுத்தும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். மேலும் போக்குவரத்து மாற்றம் பற்றிய தகவல்களை தகவல்கள் மக்களுக்கு கூறப்பட்ட பின்பே அது நடைமுறைக்கு வரும் சாலை போக்குவரத்து பற்றி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தவும் கோரிக்கையை தெரிவிக்கவும் 90031-30103 என்ற எண்ணிற்கு கட்செவி அஞ்சல் மூலமாகவும், இல்லையெனில் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.