தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் தலைவாசல் அருகே நாவ குறிச்சி கிராமத்தில் பிடாரியம்மன், கம்பபெருமாள், அய்யனார் உள்ளிட்ட 9 கோவில்களின் 50 கோடி சொத்துக்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ராஜா, சென்னை, சேலம் அறநிலையத்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.