மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்சியை சேர்ந்த சுமன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த‌ மனுவில் திருச்சி மாவட்டத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த பலர் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் சமையல் பணிக்கு சேர்ந்தோம். எங்களுடைய கல்வி சான்றுகளை திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கல்வி தகுதி அதிகமாக இருப்பதால் எங்களுடைய பணி  நடவடிக்கையை ரத்து செய்துள்ளனர். எனவே எங்களை மீண்டும் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு பணிக்கான விளம்பரத்தில் கல்வி தகுதி தொடர்பான எந்த ஒரு குறிப்பும் இடம்பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சமையலர் பணிக்கான அறிக்கையில் கல்வி தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். அதன் பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக நீக்கப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.