தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜயுடன் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா விமான நிலையத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது நடிகை ராஷ்மிகா விமான நிலையத்திற்கு தாமதமாக சென்றுள்ளார். இதன் காரணமாக ராஷ்மிகா அங்கிருந்தவர்களிடம் சாரி சாரி என பலமுறை கேட்டுள்ளார். மேலும் ஒரு முன்னணி நடிகையாக இருந்து கொண்டு நடிகை ராஷ்மிகா தாமதமாக சென்ற காரணத்திற்காக சாரி சாரி என பலமுறை கேட்டு பணிவுடன் நடந்துகொண்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.