தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடெக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது. இந்த பாடலை இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் முதன் முதலாக பாடியிருந்தார். இதற்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதில் சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் பங்களிப்பு எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை நடிகர் தனுஷ் ரீ‌ட்வீட் செய்து ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.