தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இது கன்னட படமான மஃப்டி என்பதன் ரீமேக் ஆகும். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் productions பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் பத்து தல ரிலீஸ் ஆகும் அதே நாளில் விடுதலை திரைப்படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் காரணமாக பத்து தல திரைப்படத்தின் வசூல் பாதிப்படையலாம் என்று கூறப்படுகிறது.