அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக தலைமைக்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். ஆதரவாளர்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். கோடை விடுமுறை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு மனுவை விசாரிக்கின்றனர்.