பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பொருட்டு  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடுகளுக்கு சென்று நேரடியாக டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ரேஷன் கடைகள் மூலமாக ஜனவரி 9-ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. தினமும் 200 முதல் 300 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுபட்டு போனவர்கள் ஜனவரி 13-ஆம் தேதியில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் ரேஷன் கடைக்கு வர முடியாத நிலையில் இருப்பவர்கள் அவர்களின் அத்தாட்சி கடிதம் பெற்று வந்து ஒருவர் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.