நாடு முழுவதும் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் எந்த ரேஷன் கடையிலும் பொருள்களை வாங்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதனால் முகவரி மாறி சென்றாலும் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமல் தமிழகத்திற்குள் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தற்போது தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

இதனை ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டுமே வாங்க முடியும் என்று உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் இடம் பெற்றுள்ள நிலையில் அதை எந்த ரேஷன் கடையிலும் வாங்க அனுமதி வழங்கினால் முறைகேடு நடைபெறும். எனவே பொங்கல் பரிசு வாங்க ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு வருவதால் கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய ரேஷன் கடையில் மட்டுமே பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.