பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாடு ஆளுநர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசு சார்பாக ஆளுநரின் பொங்கல் விழாவில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் ஆளுநர் இன்று வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தமிழக ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிட்டு ஆளுநர் ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.