தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால் வருகின்ற 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரை 50,000 பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 8,000- க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.