வருடம் தோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்காண முன்பதிவு கடந்த மாதம் 12-ம் தேதியே தொடங்கியது. அரசு பேருந்துகளில் முன் பதிவு இடங்கள் நிரம்பிவிட்டன. இதுவரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்.

ஜனவரி 13, 14ஆம் தேதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் இடங்கள் இல்லாததால் பிற போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பொங்கல் சிறப்பு பேருந்துகளை முன்கூட்டியே இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.