ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த இரண்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நகரில் உள்ள இருகலம்மா கட்டை சேர்ந்த ஷேக் கரிமுல்லா, அம்மு தம்பதிக்கு கரிஷ்மா, கலேஷா (2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
\கடந்த 7ஆம் தேதி மாலை இருகாலம்மா கோவிலில் கலேஷா விளையாடி கொண்டிருந்த போது பெட்ரோல் பாட்டிலை எடுத்து குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.