உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகைக்கடையில், பெண் ஒருவர் தனது மகளைக் கூடவே வைத்துக் கொண்டு, நகை வாங்குவது போல் நடித்து 400 கிராம் வெள்ளிக் கொலுசைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தத் திருட்டுச் சம்பவம் முழுவதுமாகப் பதிவாகியுள்ளது. காலை நேரத்தில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தனது மகளுடன் கடைக்குள் வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த உரிமையாளரிடம், தனக்கு வெள்ளிக் கொலுசுகளைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.

சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக பல்வேறு வடிவமைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண், கடைக்காரரின் கவனத்தைத் திருப்பி, ஒரு ஜோடி கொலுசுகளைத் தனது உடைகளுக்குள் மறைத்து, பின்னர் அவற்றை ரவிக்கைக்குள் சொருகிக் கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் எந்த நகையையும் வாங்காமல் தனது மகளுடன் கடையை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் சென்ற பிறகு கடைக்காரர் நகைகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, சுமார் 400 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சந்தேகம் ஏற்பட்டு கடையின் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தபோது, அந்தப் பெண் கொலுசைத் திருடுவது தெளிவாகத் தெரிந்தது.

“>

இதையடுத்து, கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார். இந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.