பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருப்பது போல ஆண் குழந்தைகளுக்கும் பொன்மகன் சேமிப்பு திட்டம் உள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை உங்களுடைய மகனின் பேரில் சேமித்தால் எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு 9.7 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது.

நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் குறித்து போஸ்ட் ஆபீசில் அல்லது தமிழ்நாடு போஸ்ட் வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான திட்டம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை சேமிக்கலாம் .மொத்தம் 15 வருடங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆண் குழந்தைகள் இந்த திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது.