நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1984 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 38 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டது. இதனால் இந்த செயற்கைக்கோள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு வாய்ப்புள்ளதாக நாசா கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விழுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏறத்தாழ 2.5 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் விழுந்தால் சுற்றுவட்ட பாதை கடப்பதற்குள் முக்கால்வாசி பாகங்கள் எரிந்து சாம்பல் ஆகிவிடும் என்ற காரணத்தினால் ஆபத்தானது இல்லை என கூறப்பட்டுள்ளது.

இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. எனவே மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா போன்றவை செயற்கைக்கோள் விழும் என கூறப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் அவை இந்தியாவில் விழும் என்று சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.