ஒரு “சைக்கோ கொலையாளி” பென்சில்வேனியாவில் ஒரு வினோதமான வாக்குவாதத்தில் தனது காதலியை குத்தி கொன்ற பிறகு கைது செய்யப்பட்டார். பெஞ்சமின் என்ற 49 வயது நபர் சில்வா என்ற 50 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில்வா தனது தலை முடியை வெட்டி புது ஸ்டைலுக்கு மாறியுள்ளார். இது பெஞ்சமினுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த பெஞ்சமின் கத்தி ஒன்றால் தனது காதலியை குத்தி கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது மேலும் இருவர் சில்வாவின் சடலத்தின் அருகே காயமடைந்த நிலையில் இருந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.